அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த 28 வயதான லஸ்டின் இமானுவேல் என்ற இளைஞன் 10 இளம் பெண்களை ஒரே நேரத்தில் கடந்த ஜூலை 31ஆம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இது தொடர்பான காணொளியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள இமானுவேல் “இன்று நான் 10 பெண்களை மணந்தேன் அனைவரும் என் மனைவிகள்” என்ற தலைப்பில் காணொளியைப் பகிர்ந்துள்ளார்.
மேலும் 9 வினாடிகள் கொண்ட இந்த காணொளியில் ஒன்பது மணப்பெண்கள் தங்கள் மாப்பிள்ளையை சுற்றி வருவது இடம்பெற்றுள்ளது. அந்த பெண்கள் கவர்ச்சியாக, குட்டையான, வெள்ளை ஆடைகளை அணிந்துள்ளனர். கையில் பூங்கொத்து வைத்து உள்ளனர். ஒரு மணமகள் லஸ்டினின் மடியில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
லஸ்டின் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர் என்பதுடன் பெண்களுக்கு மசாஜ் செய்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் வெளியிட்டு உள்ள திருமண காணொளிக்கு 5,81,000-க்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளன.