ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிம் என்பவர் ஒரே நேரத்தில் 2 நபர்களை திருமணம் முடித்துள்ளார். ஒருவர் அவருக்கு நிச்சயம் பேசி முடிக்கப்பட்ட ஆண். மற்றொருவரின் அந்த ஆணின் தந்தை.
திருமண வழக்கப்படி அதற்கு சாட்சியாக 2 நபர்களின் கையெழுத்து தேவை. அதில் ஒன்றை கிம்மின் தாயார் பதிவிட்டுள்ளார். இன்னொரு கையெழுத்தை மணமகனின் தந்தை போட்டுள்ளார். இங்குதான் குழப்பம் நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது சாட்சி கையெழுத்து பதிவிட வேண்டிய இடத்திற்கு பதிலாக மணமகன் என்ற இடத்தில் அவருடைய தந்தை கையெழுத்து இட்டுள்ளார். திருமண சான்றிதழ் அடிப்படையில் 2 நபர்களை கிம் திருமணம் முடித்து விட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் திருமணம் தொடர்பான சட்டப் பத்திரத்தில் தவறு ஏதும் நடக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது திருமணத்தில் நடந்த குழப்பம் குறித்து கிம் ஆஸ்திரேலியாவில் காலை நேரத்தில் அதிகம் பிரபலமாக உள்ள ‘ஃபிட்ஸி அண்டு விப்பா வித் கேட் ரிச்சி’ என்ற ரேடியோ நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசியுள்ளார்.