இந்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 305 ரூபாயாகவும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 341 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது .
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 325 ரூபாயாகவும் ஒட்டோ டீசல் லீற்றின் 289 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது .
இதேநேரம் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 185 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்அறிவித்துள்ளது .