லங்கா ஐஓசி நிறுவனம் தமது எரிபொருட்களின் விலையை இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனத்தின் விலைக்கு ஏற்றவாறு இன்று செவ்வாய் கிழமை நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 வகை பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 348 ரூபாவாகவும் ஒக்டேன் 95 வகை பெற்றோல் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 375 ரூபாவாகவும் இதேவேளை, ஒரு லீற்றர் டீசலின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு 306 ரூபாவாகவும் சூப்பர் டீசலின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 358 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.