உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன்   ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகமலே பகுதியில் விசேட  அதிரடிப்படை சிரஸ்தாவெல முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று இன்று  சோதனை நடத்தினர்.

இதன்போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 02 வெற்று குண்டுகளுடன்  சந்தேக நபரைக் கைது செய்து பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கைதான சந்தேக நபர் பொத்துவில் 05 ஐச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்கவர் ஆவார்.

மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.