உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி, பிராண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.07 அமெரிக்க டொலராகவும் டபிள்யூ. டி. ஐ. ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.07 அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த ஜூன் மாதம் முதல் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.