புத்தளம் ஜாகிரியன் காற்பந்தாட்ட கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை கட்டார் நாட்டில் இடம்பெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் எவரொக்ஸ் எஃப்.சி (Everocks FC) ஜம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
கட்டார் நாட்டுக்கு தொழில் நிமிர்த்தம் சென்ற காற்பந்தாட்டத்தில் ஆர்வமுள்ள வீரர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற Qatar Ceylon cup என வர்ணிக்கப்படும் காற்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் சீசன் – 5 கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்த போட்டியில் (BATTI FC) பட்டி எஃப்.சி அணி மற்றும் எவரொக்ஸ் எஃப்.சி (Everocks FC) மோதிய நிலையில் பட்டி எஃப்.சி அணி Qatar Ceylon cup season -5 இன் Runner up ஆக தெரிவு செய்யப்பட்டனர்.












