-கிளிநொச்சி நிருபர்-
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள பாரதி வித்யாலயத்தில் நேற்று வியாழக்கிழமை ஒரே வகுப்பை சேர்ந்த 21 மாணவர்கள் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் உணவு ஒவ்வாமை காரணமாக 21 மாணவர்கள் தர்மபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக 10 மாணவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை புதுக்குடியிருப்பு சுகாதார பரிசோதர்கள் உணவின் மாதிரியை பெற்றுச் சென்றுள்ளனர்.
இருப்பினும் ஏனைய வகுப்பை சேர்ந்த எந்த ஒரு மாணவர்களுக்கும் உணவு ஒவ்வாமை ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.