உங்களுக்கு இவரை தெரியுமா? கண்டுபிடிக்க உதவுங்கள்

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிங்கள மொழி பேசும் வயோதிபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு உளநல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி கோரியுள்ளார்.

மேலும், குறித்த வயோதிபர் குணபால மென்டிஸ் என தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். எனினும் இவர் தொடர்பில் எவ்வித மேலதிக தகவலும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வவுனியா  பொது வைத்தியசாலையின் உளநல சிகிச்சைகள் பிரிவின் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த வயோதிபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையின் உளநல பிரிவுடனோ அல்லது வவுனியா பொது வைத்தியசாலையின் உளநல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி சி. சுதாகரன் தொடலைபேசி இலக்கம் 071 4323585, உளநல பிரிவு 024 2227784, 12 ஆவது விடுதி இலக்கம் 024 2222762, 024 2222262 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு இவரை தெரியுமா