நாட்டில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று புதன் கிழமை அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி குறைவடைந்துள்ளது.
மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 313. 37 ரூபாய் முதல் 312.39 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 328.78 ரூபாய் முதல் 327.76 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 313.51 ரூபாய் முதல் 310.77 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 328 ரூபாய் முதல் 326 ரூபாயாக குறைவடைந்துள்ளது.
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியில் 316 ரூபாய் முதல் 315 ரூபாவாகவும் விற்பனை விலைகள் 328 ரூபாய் முதல் 327 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.