இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் 2025 ஜூன் மாதத்தில் 6.8 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நிலையில், 2025 ஜூலை மாதத்தில் 1% அதிகரித்து 6.14 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
இதில், நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் உள்ளடங்குவதாக மத்தியவங்கி அறிவித்துள்ளது.
இதன் பயன்பாடு நிபந்தனைகளுக்கு உட்பட்டது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.