நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
மேலும் நேற்று சனிக்கிழமை இரவு நாட்டை வந்தடைந்த அவரை வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா வரவேற்றுள்ளார்.
2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோரை சந்திப்பதற்கு நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.