ஹங்வெல்ல வெலிகன்ன, உலிவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இரத்தக் கறைகளுடன் பெண் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை நிர்வாணமாக மீட்கப்பட்டதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
ஹங்வெல்ல, வா வெலிகன்ன பகுதியைச் சேர்ந்த டோனா மலானி(வயது – 70) என்ற திருமணமாகாத பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
பொலிஸ் அவசர இலக்கத்துக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் குறித்த வீட்டை சோதனையிட்டபோது இந்தச் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர்.
இந்த மரணம் கொலையாகவோ அல்லது சந்தேகத்துக்கிடமான மரணமாகவோ இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில், இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.