அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் இரட்டை கருப்பைகள் கொண்ட பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
கெல்சி ஹேட்சர் (வயது – 32) என்ற பெண்ணே இவ்வாறு இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
இவர் தனது ஒரு குழந்தையை கடந்த 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சாதாரண பிரசவம் மூலம் பிரசவித்துள்ளதுடன் இரண்டாவது குழந்தையை கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை அறுவை சிகிச்சை மூலம் பிரசவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
இரண்டு குழந்தைகளுக்கு இடையிலான வயது வித்தியாசம் 20 மணி நேரம் எனவும் தாயும் குழந்தைகளும் ஆரோக்கிமாக இருப்பதாக குறித்த வைத்தியசாலை வைத்தியர் தெரிவித்துள்ளார்.
கெல்சி ஹேட்சர்க்கு 17 வயதில் இரட்டை கருப்பைகள் இருப்பது கண்டறியப்பட்டிருந்த நிலையில், இது 0.3 வீத பெண்களை பாதிக்கும் ஒரு அரிய குறைபாடு என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.


