இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி வட- கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் போராட்டம்
நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடத்தப்பட்டுவரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஒரே நேரத்தில் வடக்கு கிழக்கு எட்டு மாவட்டங்களிலும் இடம்பெற்றது.
அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காந்தி பூங்காவிலும்,அம்பாறை மாவட்டத்தின் திருக்கோயிலிலும், திருகோணமலை மாவட்ட த்தில் சிவன் கோவிலடியிலும், முல்லைத் தீவில் மாவட்ட செயலகத்திற்கு அருகிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் கந்தசாமி கோவிலடியிலும், மன்னாரில் நகரப்பகுதியிலும், வவுனியா மாவாட்டத்தில் புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்னாலும், யாழ்ப்பாணத்தில் செம்மணிப் பகுதியிலும் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் வடக்கு கிழக்கு 08 மாவட்டங்களை சார்ந்த பாதிக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், படுகொலை செய்யப்பபட்டவர்களின் உறவினர்கள், காணி மற்றும் வள சுரண்டைலுக்கு உள்ளான மக்கள், பெண்கள் வலையமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், மனித உரிமை பாதுக்காவலர்கள் என பலர் கலந்து கொண்டிருந்ததுடன், தங்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு பன்னாட்டு சுதந்திர நீதிப் பொறிமுறை ஊடாக மட்டுமே எமக்கான நீதியை வேண்டுகிறோம் எனக் கேட்டு நின்றனர்.
இப்போராடத்தின் போது பன்னாட்டு நீதி கோரிய மகஜர் ஒன்றும் பன்னாட்டு சமூகத்தின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட து.
மேற்படி போராட் டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் மாண்புமிகு மலையக சிவில் மக்கள் கூட்டினைவவினால் கொழும் பில் UN RC அலுவலகத்திற்கு முன்னால் மக்கள் போராடடம் ஒன்றும் முன்னெடுக்கப் பட்டிருந்தது.
மட்டக்களப்பு
வவுனியா
மன்னார்
திருகோணமலை
முல்லைத்தீவு