மேஷம்
வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பதறாமல் பக்குவமாகச் செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் ஒற்றுமைபிறக்கும். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியமான முடிவுகளை எடுக்கும் நாள்.
மிதுனம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.
கடகம்
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும், உரிய சிகிச்சையினால் உடனே நிவாரணம் கிடைத்து விடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெரும்பாலும் இறுதியில் நல்லதே நடக்கும்.
சிம்மம்
மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்குத் தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதுடன் லாபமும் அதிகரிக்கும்.
கன்னி
ஓய்வின்றி உழைக்க வேண்டிவரும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
துலாம்
சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப்புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சியை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.
விருச்சிகம்
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். மதிப்பு கூடும் நாள்.
தனுசு
சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து செல்லும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். காதில் வாங்காதீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
மகரம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சியால் வெற்றி பெறும் நாள்.
கும்பம்
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலை அமையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
மீனம்
சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.