இந்த வருடத்தில் கடந்த வார இறுதி வரையான காலப்பகுதியில்இ அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 11.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஜப்பானிய யெனுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 19.5 சதவீதத்தினாலும் ஸ்ரேலிங் பவுண்ட்ஸுற்கு நிகராக 5.6 சதவீதத்தினாலும் யூரோவுக்கு நிகராக 7.8 சதவீதத்தினாலும் இந்திய ரூபாவுக்கு நிகராக 11.8 சதவீதத்தினால் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.