கடந்த வாரம் அமெரிக்க டொலருக்கு எதிராக வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று திங்கட்கிழமை சற்று உயர்வடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் ரூ.287.42 முதல் ரூ. 285.61 ஆகவும், விற்பனை விலை ரூ. 300.32 முதல் ரூ. 298.85 ஆகவும் பதிவாகியுள்ளது.
வளைகுடா நாணயங்களுக்கு எதிராகவும் மேலும் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாயின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.
