நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் வாங்கும் விகிதம் ரூ.290.76 முதல் ரூ. 287.87 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 303.95 முதல் ரூ. 300.92 ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும், வளைகுடா நாணயங்கள் உட்பட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.
