நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 289.89 முதல் ரூ. 290.76 ஆகவும், விற்பனை விலையும் ரூ. 303.26 முதல் ரூ. 303.95 ஆகவும் பதிவாகியுள்ளது.
வளைகுடா நாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக உயர்ந்துள்ள அதே வேளையில், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் சற்று குறைந்துள்ளது.
