நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் வாங்கும் விகிதம் ரூ.297.98ல் இருந்து ரூ. 297.60 ஆகவும், விற்பனை விலை ரூ.311.23 முதல் ரூ.310.95 ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும் ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் மேலும் கணிசமாக உயர்ந்துள்ளது.
