இலங்கை மத்திய வங்கி இன்று புதன் கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 323 ரூபா 69 சதம் விற்பனை பெறுமதி 337 ரூபா 17 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்வனவு விலை 416 ரூபா 45 சதம் விற்பனை பெறுமதி 435 ரூபா 48 சதம்
யூரோ ஒன்றின்கொள்வனவு விலை 356 ரூபா 48 சதம் விற்பனை பெறுமதி 373 ரூபா 82 சதம்.
கனடா டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 244 ரூபா 01 சதம் விற்பனை பெறுமதி 256 ரூபா 95சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 217 ரூபா 52 சதம் விற்பனை பெறுமதி 229 ரூபா 56 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 242 ரூபா 55 சதம் விற்பனை பெறுமதி 254 ரூபா 99 சதமாகவும் பதிவாகியுள்ளது.