கடந்த சில நாட்களாக 2,000 ரூபாவையும் தாண்டி விற்பனை செய்யப்பட்ட கரட் இன்று பேலியகொடை வர்த்தக நிலையத்தில் 1,000 ரூபாவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இன்று வியாழக்கிழமை பேலியகொடை சந்தையில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
பேலியகொடை வர்த்தக நிலையத்தில் இன்று சில மரக்கறிகளின் மொத்த விலை விபரம் வருமாறு,
கரட் 1,000 ரூபா முதல் 1இ200 ரூபா வரை
போஞ்சி 550 ரூபா முதல் 600 ரூபா வரை,
கோவா 600 ரூபா முதல் 650 ரூபா வரை,
தக்காளி 200 ரூபா முதல் 300 ரூபா வரை, லீக்ஸ் 400 ரூபா
கத்திரிக்காய் 550 ரூபா முதல் 600 ரூபா வரை, விற்பனை செய்யப்படுகின்றது