இந்த வருடம் ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை தினங்கள் வரும் நிலையில், மாதத்தின் முதலாவது அமாவாசை தினமான இன்று திங்கட்கிழமை ஆடி அமாவாசை விரதமாக கருதப்படமாட்டாது என சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்தார்.
இதற்கமைய, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15ம் திகதியே ஆடி அமாவாசை விரதமாகும் கருதப்படும் என்பதுடன், அன்றைய தினம் பிதிர் கடன்களை நிறைவேற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.