தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்பில் இலங்கையின் நதீஷா ராமநாயக்க தங்கப்பதக்கத்தை பெற்று கொண்டார்.
பேங்கொக்கில் நடைபெறும் ஆசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்பின் இரண்டாம் நாள் போட்டிகள் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றன இதன் போது மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தை 52.61 விநாடிகளில் கடந்து இலங்கையின் நதீஷா ராமநாயக்க தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.