அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இறந்தவர்களின் உடலை எரியூட்டும் ‘ரிட்டர்ன் டூ நேச்சர்’ என்ற அமைப்பின் பென்ரோஸ் என்ற சிறிய நகரத்தில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் 189 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கணவன் மனைவியான ஜான் ஹால்போர்டு மற்றும் கேரி ஹால்போர்டு ஆகியோர் இயற்கையான முறையில் உடலை தகனம் செய்வோம் என விளம்பரப்படுத்தி ‘ரிட்டர்ன் டூ நேச்சர்’ என்ற அமைப்பை நடாத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த தகனம் செய்யும் கட்டிடத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக முறைப்பாடுகள் வந்துள்ளதையடுத்து தொடர்ந்து சோதனை மேற்கொண்டதில் அழுகிய நிலையில் ஏராளமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது கண்டெடுக்கப்பட்ட உடல்களை அடையாளம் காணும் பணி ஆரம்பமாகியுள்ளதுடன் ஜான் ஹால்போர்டு மற்றும் கேரி ஹால்போர்டு ஆகியோரிடம் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.
மேலும் கண்டெடுக்கப்பட்ட 189 உடல்களுக்கும் உடல்கள் தகனம் செய்யப்பட்டதாக அஸ்தி கொடுக்கப்பட்டுள்ளது . எனவே இந்த சம்பவம் கொலராடோ மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு


