2024 ஆம் ஆண்டில் அரச சேவைக்கான ஆட்சேர்ப்புகளுக்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட மாட்டாது என 2024 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்கான வழிகாட்டல்களை அமைச்சுகளுக்கு வழங்கிய போது நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச நிறுவனங்களுக்காக வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 2024 ஆம் ஆண்டிலும் அமுலில் இருக்கும் என வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டு வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.