ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் அதிவேகமாக பயணித்த கார் ஒன்று ஹட்டன் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிவேகமாக பயணித்த கார் கனமழை காரணமாக வழுக்கி சென்று வீதிக்கு அருகில் உள்ள மண் மேட்டில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் போது சாரதி மாத்திரமே வாகனத்தில் இருந்துள்ள நிலையில் அவருக்கு சிறு காயங்கள் மாத்திரமே ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.