வடக்கு மாகாண ஆளுநர் – இலங்கை ஆசிரியர் சங்கம் சந்திப்பு
-யாழ் நிருபர்-
இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் வடமாகாண ஆளுநருக்கிடையேயான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசெப் ஸ்ராலின் உள்ளிட்ட குழுவினர் மற்றும் ஆளுநர் திருமதி சாள்ஸ். கல்வி அமைச்சின் செயலாளர் திரு.பற்றிக் நிறஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது வடமாகாணத்தில் கல்வி செயற்பாட்டில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம். அதிபர் -ஆசிரியர்கள் இடமாற்றம். பாடசாலைகளில் உள்ள வளப் பிரசினை போன்றவை பேசப்பட்டுள்ளதாக ஜோசெப் ஸ்ராலின் தெரிவித்தார்.