
யாழ்.பருத்தித்துறையில் ஒரு தொகை கஞ்சாவை மீட்ட பொலிஸார்!
யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை நூறு கிலோவிற்கு மேற்பட்ட 47 பொதி கஞ்சா மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் கேரள கஞ்சாவை பருத்தித்துறை கடற்பரப்பில் இறக்க முற்பட்டபோது, பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலமையிலான பொலிஸார், சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு, 47 பொதி கஞ்சாவை கைப்பற்றியதுடன் படகு ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும், கஞ்சாப் பொதிகள், படகு உட்பட்ட சான்றுப் பொருட்களையும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்த பொலிஸார் தயாராகி வருகின்றனர்.
மீட்கப்பட்ட கஞ்சாப் பொதிகள் 3 கோடிக்கும் அதிக பெறுமதியானவை என பொலிஸார் தெரிவித்தனர்.
