மாத்தறையில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி

மாத்தறை வெலிகம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இதன் போது 52 வயதான ஒருவர் உயிரிழந்ததுடன், 20 வயதான மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றச் செயல்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்