மகாவலி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கைது

இலங்கை மகாவலி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி பி. கொட்டகம கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு எதிராக அரச சொத்துக்களை குற்றவியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.