
பொலிஸாரின் விசேட நடவடிக்கைகளின் போது 83 பேர் கைது
நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் விசேட நடவடிக்கைகளின் போது 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிக்கும் விசேட நடவடிக்கையின் போது இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களில் 45 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
