
பெண் பிள்ளைகளுக்கு இலவச “அணையடை ஆடை”
அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு “அணையடை ஆடை” (Sanitary towels) இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
மேலும் இந்த திட்டம் ஒரு பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) திட்டமாக இருக்கும் என்றும் முன்னோடி திட்டமாக 300,000 பெண் பிள்ளைகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படவுள்ளதுடன் ஒரு மில்லியன் பெண் பிள்ளைகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் பின்னர் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
