
நிவாரண உதவிகளை ஏற்றிச் சென்ற கார் விபத்து
காலி, பியடிகம பகுதியிலுள்ள ரயில் கடவையில் கார் ஒன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
காலியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் குறித்த கார் மோதியுள்ளது.
குறித்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை ஏற்றிச் சென்ற கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
எனினும் இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
