நிலநடுக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அறிவுறுத்தலுக்கமைய திருகோணமலை மாவட்ட செயலகம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் நிலநடுக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது 22, 24 ஆம் திகதிகளில் கோமரன்கடவல, மஹதியுல்வெவ, மெதவச்சிய போன்ற பாடசாலைகளில் நடைபெற்றது.

மொத்தமாக 14 பாடசாலைகளை உள்திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் நிலநடுக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிளடக்கியதாக இவ்விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது. இதில் 1103 மாணவ மாணவிகளும் 68 ஆசிரியர்களும் பங்கேற்று நிலநடுக்கத்திலிருந்து தங்களை பாதுகாப்பது தொடர்பான அறிவினை பெற்றுக்கொண்டனர்

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

திருகோணமலையில் அண்மைக் காலமாக ஏற்பட்டு வருகின்ற நிலநடுக்கம் தொடர்பிலும் அதனை எதிர்கொள்ளக் கூடிய வகையில் மாணவர்கள் உட்பட ஏனைய தரப்பினரையும் தயார்ப்படுத்தும் வகையிலும் நிகழ்ச்சிகளை நடாத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநரினால் திருகோண மலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போது அறிவுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வில் திருகோணமலை மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ், திருகோணமலை வடக்கு வலயக்கல்வி பணிமனையின் வலயக்கல்வி பணிப்பாளர், கோமரன்கடவல உதவி பிரதேச செயலாளர், மாவட்ட , மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்