
சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
பெலியத்த, ஹட்போதிய பிரதேசத்தில் பழைய வீடொன்றை இடிக்க முற்பட்ட போது அதன் சுவர் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெலியத்த ஹத்போதிய ஏகமுத்து மாவத்தையில் வசித்து வந்த ரஞ்சித் கங்கணம் ஆச்சாரி (வயது – 47) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உறவினர் ஒருவரின் பழைய வீட்டின் சுவர்களை இடிப்பதற்காக தனது மகனுடன் சென்ற அவர், சுவர் ஒன்றில் இருந்து கதவு கைப்பிடியை அகற்ற முற்பட்ட போது, திடீரென சுவர் இடிந்து விழுந்து அதன் அடியில் புதையுண்டு உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
