கொட்டகலையில் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சிரமதான நிகழ்வு
-அம்பாறை நிருபர்-
கொட்டகலை பிரதேச சபை அதிகாரத்திற்குட்பட்ட போகாவத்தை நகரத்தில் க்ளீன் ஸ்ரீலங்கா (Clean Srilanka ) வேலைத்திட்டத்தின் கீழ் கொட்டகலை பிரதேச சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் (RDA ) இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
சிரமதான நிகழ்வானது கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்களின் தலைமையின் கீழ் இடம்பெற்றது இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் பிரதேச சபையின் முன்னாள் கௌரவ உறுப்பினர் லெட்சுமன் மேலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில் அதிகாரி, தொழில்நுட்ப அதிகாரி , ஊழியர்கள், கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் , உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் , போகாவத்தை முச்சக்கர வண்டி சாரதிகள்மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



