கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு கீரி சம்பா அரிசியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் நிலை உருவாகியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு கீரி சம்பா அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது .
கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்து அரிசிக்கான தட்டுப்பாட்டை உருவாக்க ஒரு தரப்பு முயற்சித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதேநேரம் பாணந்துறையில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் 300 ரூபாய்க்கு ஒரு கிலோகிராம் அரிசியை விற்பனை செய்த வர்த்தகருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹொரணையில் கீரி சம்பா அரிசியை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த வர்த்தகருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவரிடம் இருந்து 5 கிலோகிராம் எடையுடைய 25 அரிசி பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
