‘கிங்’ படத்தின் டீஸருடன் 60வது பிறந்தநாளை கொண்டாடும் ‘பாலிவுட்டின் ராஜா’

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இன்று ஞாயிற்றுக்கிழமை தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

ரசிகர்கள் அவரது மும்பை வீட்டிற்கு வெளியே இசை, வானவேடிக்கைகள் மற்றும் “பாலிவுட்டின் ராஜா”வை கௌரவிக்கும் சுவரொட்டிகளுடன் அவரது பிறந்தநாளை கொண்டாடினர்.

சித்தார்த் ஆனந்த் இயக்கிய மற்றும் அவரது மகள் சுஹானா கானுடன் இணைந்து நடிக்கும், அதிரடி த்ரில்லர் படமான “கிங்” படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

2 நவம்பர் 1965 இல் புது டில்லியில் பிறந்த ஷாருக்கான், மூன்று தசாப்தங்களாக 80 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் செல்வாக்கு மிக்க பொழுதுபோக்கு நடிகர்களில் ஒருவராக இன்று உருவெடுத்துள்ளார்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் சமூக ஊடகங்களை நிரப்பி கொண்டிருக்கின்றனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பல பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களைத் ஷாருக்கானுக்கு தெரிவித்து வருகின்றனர்.

“கிங்” திரைப்படம் 2026 இல் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.