
கார்த்திகை பூக்கொடியின் கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர்
யாழ் பகுதியில் கார்த்திகை பூக்கொடியின் கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
கொடுக்குளாய், உடுத்துறையைச் சேர்ந்த மாரிமுத்து சுப்ரமணியம் (வயது 47) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உயிரிழந்த நபர் சில தினங்களுக்கு முன்னர் கார்த்திகை பூக்கொடியின் கிழங்கை உட்கொண்டிருந்த நிலையில், திடீரென சுகவீனமுற்றதை தொடர்ந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இவரது மரணம் தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி இன்று ஞாயிற்று கிழமை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
