காட்டு யானை தாக்கியதில் பெண் உயிரிழந்துள்ளார்

பொலன்னறுவை அரலகங்வில பிரதேசத்தில் பெண் ஒருவர் காட்டு யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

வீடொன்றின் பின்னால் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்குள் மற்ற விலங்குகள் உடல் உறுப்புகளை தின்றுவிட்டதாகவும்இ உயிரிழந்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.