கண் இமைகளில் 250 பேன்கள் மற்றும் 85 ஈர்கள்!

குஜராத், சவர்குண்ட்லாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் விசித்திரமானதும் அரிதானதுமான நோய்நிலைமை ஒன்று பதிவாகியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாகக் கண் இமைகளில் கடுமையான வலியும் அரிப்பும் உள்ளதாகத் தெரிவித்து பெண் ஒருவர் மருத்துவ சிகிச்சைகளைப் பெற மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அவரின் கண்கள் சிவந்திருந்ததாகவும், அவரால் தூங்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கண் மருத்துவரை அணுகியபோது, கண் இமைகளில் உயிருள்ள பூச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தமாக 250 பேன்கள் மற்றும் 85 ஈர்கள் இருந்துள்ளன.

பேன்களை அகற்றும் சிகிச்சை இரண்டு மணிநேரம் நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.