உலகிலேயே மிகக் குட்டையான நீர் எருமை

உலகிலேயே மிகக் குட்டையான உயிருள்ள நீர் எருமை, இந்தியாவின் மகாராஷ்டிராவின் மலாவாடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் திரிம்பக் போரேட்டின் பண்ணையில் பிறந்த மூன்று வயதுடைய அழகான இந்த மாடு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இதன் பெயர் ராதா என்றும், வெறும் 2 அடி 8 அங்குலம் (83.8 செ.மீ) உயரம் கொண்டது என கின்னஸ் குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.

ராதா, உலகின் மிக உயரமான நீர் எருமையான கிங் காங்கை (தாய்லாந்து) விட கிட்டத்தட்ட நான்கு அடி (1.2 மீ) சிறியது. அதன்(கிங் காங்) உயரம் 6 அடி 0.8 அங்குலம் ஆகும்(185 செ.மீ).