
இரத்ததான நிகழ்வு
“நாட்டில் ஏற்பட்ட பேரிடரிற்கு உதிரம் கொடுத்து , உயிரைக் காப்போம்” – எனும் தொனிப்பொருளிலும் மட்டக்களப்பு IDM, Poineer Eastern Campus இன் 7வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாகவும் வருடந்தோறும் நடைபெறும் இரத்ததானம் வழங்கும் நிகழ்வில் இவ் வருடதிற்கான குருதிகொடை நிகழ்வு நேற்று சனிக்கிழமை IDM,Poineer Eastern Campus மண்டபத்தில் இடம்பெற்றது.
IDM, Poineer Eastern Campus இன் பணிப்பாளர் திரு. T. சசிக்குமார், தலைமையில் ஆரம்பமாகிய இன் நிழ்வில் பிராந்திய முகாமையாளர் திரு. K. கேதீஸ்வரராஜா, பிரதி முகாமையாளர் திரு R. ஜதீஸ் மற்றும் IDM, Poineer Eastren campus அலுவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இவ் இரத்ததான நிகழ்விற்கு காத்தான்குடி ஆதார வைத்தியசாலை இரத்தவங்கி வைத்தியர் திருமதி.நித்தியானந்தனா தலைமையில் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது கெம்பஸின் உத்தியோகத்தர்கள், HND, Diploma மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




