ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு – 20 பேர் பலி : 500 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் இன்று  திங்கட்கிழமை ஏற்பட்ட நில அதிர்வினால் இதுவரை 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் சுமார் 500 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

அத்துடன் இந்த நில அதிர்வினால் பல்க் (Balkh) மற்றும் சமங்கான் மாகாணங்களின் சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தலிபான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.