அரசாங்கம் ‘அஸ்வெசும’ திட்டத்தை விரைவாக இரத்து செய்யவுள்ளது -எதிர்க்கட்சித் தலைவர்
.அரசாங்கம் ‘அஸ்வெசும’ சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை விரைவாக இரத்து செய்ய உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் .
அனுராதபுரத்தின் தலாவ பகுதியில் இன்று (4)நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களிடையே வறுமையைக் குறைக்க அஸ்வெசும கைகொடுக்கின்றதா? ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டம் வறுமை ஒழிப்பு, முதலீடு, சேமிப்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உத்தரவாதத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இருப்பினும், அஸ்வெசும இந்த நோக்கங்களை அடையத் தவறிவிட்டது,” என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
