அரசாங்கங்கள் மாற வழிவகுத்த கிளர்ச்சிகளுக்கு “மோசமான நிர்வாகமே” காரணம்!

கடந்த மூன்றரை ஆண்டுகளில், பங்களாதேஷ் நேபாளம் மற்றும் இலங்கையில் அரசாங்கங்கள் மாறுவதற்கு வழிவகுத்த கிளர்ச்சிகளுக்குப் பின்னால் ‘மோசமான நிர்வாகமே’ காரணம் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, சர்தார் படேல் நினைவுச் சொற்பொழிவை ஆற்றிய திரு.தோவல், தேசத்தைக் கட்டியெழுப்பும் செயல்முறையிலும், தேசிய அரசைப் பாதுகாப்பதிலும் நிர்வாகம் முக்கிய பங்கு வகிக்கிறது, என்று தெரிவித்தார்.

பெரிய பேரரசுகள், முடியாட்சிகள், தன்னலக்குழுக்கள், பிரபுக்கள் அல்லது ஜனநாயகங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி உண்மையில் அவற்றின் நிர்வாகத்தின் வரலாறாகும். பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் மற்றும் பிற நாடுகளில் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான முறைகள் மூலம் ஆட்சி மாற்றம் இடம்பெற்றமை மோசமான நிர்வாகத்தின் நிகழ்வுகளாகும், என்று திரு.தோவல் கருத்து தெரிவித்தார்.