கிளிநொச்சியில் தனியார் கடைச்சல் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில், இன்று செவ்வாய்க்கிழமை காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியை சேர்ந்த சிவகுருநாதன் சாரங்கன் (வயது 23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த தனியார் கடைச்சல் தொழிலகத்தில் இளைஞன் பணியாற்றிக்கொண்டிருந்த போதே இவ்வாறு மின்சாரம் தாக்கியுள்ளது.
முறையற்ற மின் இணைப்பு காரணமாகவே இவ்வாறு விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.