Unicef அனுசரனையில் டிஜிட்டல் தொழில் நுட்ப உபகரணங்கள் வழங்கி வைப்பு
-கிண்ணியா நிருபர்-
Aklelius மொழி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், UNICEF நிறுவனம் பங்களிப்பின் அடிப்படையில், கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் ஏற்பாடு செய்த டிஜிட்டல் தொழில்நுட்பக் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை மெதடிஸ்ட் மகளிர் கல்லூரியில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
திருகோணாமலை மாவட்டத்தில் 12 பாடசாலைகள் இதற்காக தெரிவு செய்யப்பட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கு.குணநாதன் மாகாண கல்வி பணிப்பாளர் ஹசந்தி உட்பட யூனிசெப் அதிகாரிகள் ,வலயக் கல்வி பணிப்பாளர்கள்,அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .
ஆரம்ப நெறி பாடசாலை மாணவர்களுக்கு கணினி ஊடாக மென்பொருள் தயாரிக்கப்பட்டு ஆங்கில கல்வியை மேம்படுத்தும் புதிய செயல்முறை இதுவாகும். அக்யூலியஸ் எனும் மென்பொருள் இதற்கு பயன்படுகின்றன.
வழங்கப்பட்ட உபகரணங்களில் ஸ்மார்ட் போர்ட், லேப்டாப், மற்றும் இனிய டிஜிட்டல் உபகரணங்களும் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டன.
மேலும், ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்,
மாணவர்களின் 13 ஆண்டு கல்வி முடிவின் பின்பு ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாதுள்ளது இதற்கான காரணங்களை கண்டறிந்து ஆசிரியர்கள் அதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் முறையாக கல்வியை வழங்குவதன் மூலம் சிறந்த பெறுபேறுகளை பெற முடியும். என தெரிவித்தார்.
